image

என் கிரிக்கெட் பயணத்தில் இவருக்கு முக்கிய பங்கு இருக்கு: ஜஸ்பிரித் பும்ரா!




தனது கிரிக்கெட் பயணத்தில் முன்னாள் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்டுக்கு மிக முக்கிய பங்கு இருப்பதாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜஸ்பிரித் பும்ரா. இவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த பொழுது தனது பவுலிங்கிற்கு மிகவும் உதவியாக முன்னாள் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஷேன் பாண்ட் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் பைனலில் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியை பும்ரா வேகப்பந்துவீச்சில் முன்னின்று வழி நடத்த உள்ளார். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் வீடியோ பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தான் விளையாடிய இதை பும்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பும்ரா கூறுகையில், ?நான் எப்போதும் ஷேன் பாண்ட் உடன் பேச முயற்சி செய்வேன். அது இந்திய அணியில் நான் இடம்பெறாத போதும் அவருடன் பேச முயற்சித்து உள்ளேன். ஒவ்வொரு ஆண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் போது அவரிடமிருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்ள்ள ஆர்வமாக இருப்பேன். எனது பவுலிங்கில் புதிய அம்சங்களை சேர்த்துக்கொள்ள நினைப்பேன். எனது கிரிக்கெட் பயணத்தை வடிவமைத்ததில் அவருக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. தற்போது வரை அவருடனான உறவு மிகவும் சிறப்பாகவே நான் பார்க்கிறேன். இன்னும் மேலும் பல ஆண்டுகளுக்கு இவருடனான இந்த உறவு நீடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கடந்த 2015ம் ஆண்டு முதல் முறையாக நான் சந்தித்தேன். அப்போது அவர் பவுலிங் செய்யும் விதத்தை பார்த்து கவரப்பட்டேன். அதன்பிறகு அவரை நேரடியாக இங்கு சந்திக்கும் பொழுது அது மிகச் சிறந்த அனுபவமாக எனக்கு அமைந்தது. ஒவ்வொரு முறையும் கிரிக்கெட் களத்தில் எனக்கு உதவியாக அவர் இருந்துள்ளார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் பவுலிங்கில் நுணுக்கங்களை அவர் அதிக அளவில் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார்?என்றார்.



Pics Are!!!

Image
Image
Image