image

அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் நிறுத்தி வைப்பு : தமிழக அரசு அறிவிப்பு!




சென்னை : அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் ஊதியம் மேலும் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது :- அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் ஊதியம் 2022 மார்ச் 31 தேதி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. கொரோனா தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள நிதிச் சுமையை தவிர்க்கும் வகையில் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஒவ்வொரு அரசு ஊழியர்களுக்கும் 15 நாட்களுக்கான ஈட்டிய விடுப்புக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



Image
Image
Image