image

சக மனிதரைக் காலில் விழவைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா? : கமல்ஹாசன் கடும் கண்டனம்..!!




விழுப்புரம் : திருவெண்ணெய்நல்லூர் அருகே கோவில் திருவிழா தொடர்பாக 3 முதியவர்களை காலில் விழவைத்து சம்பவத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது ஒட்டனந்தல் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 12ஆம் தேதி பட்டியலின பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாரியம்மன் கோவில் திருவிழா ஒன்றை நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் ஊர் மக்களை அழைத்து அங்கு கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளை எடுத்து சென்றுள்ளனர். அதன் பின்னர் காவல் நிலையத்தில் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு பொருட்களை மீட்டு வந்துள்ளனர். இதனிடையே, தங்களை மீறி திருவிழா நடத்தியதாக கூறி தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்து, அங்கிருந்த ஊர்மக்கள் அனைவரின் காலிலும் விழச் செய்துள்ளனர். இது தொடர்பான படக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் கோகுல்ராஜ் மற்றும் சீதாராமன் ஆகிய இருவரை கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ?இந்தியர் யாவரும் என் உடன்பிறந்தோர் என்று உறுதிமொழி எடுக்கும், குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று மனப்பாடப் பாட்டு கற்பிக்கும் தமிழகத்துக்குள்தான் விழுப்புரம் ஒட்டனேந்தல் இருக்கிறதா?



Image
Image
Image